Sunday 25 August 2013

உங்களுக்குத் தெரியுமா?

கண்களில் அடையாளம் காணலாம்

வேட்டையாடும் விலங்கு - வேட்டையாடப்படும் விலங்கு

புலி, நரி போன்ற வேட்டையாடும் விலங்குகளின் கண்கள் அவற்றின் முகத்தில் முன்பகுதியில் இருக்கும்.

- தங்கள் கண்களுக்கு முன்பு உள்ள மிருகத்தை மட்டுமே காண்பதற்கு

மான், முயல் போன்ற வேட்டையாடப்படும் விலங்குகளின் கண்கள் அவற்றின் தலையின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும். 

- எந்தத் திசையிலிருந்தும் எதிரி வந்தால், அவற்றால் பார்த்துத் தப்பித்து ஓட முடியும். 

INTERNATIONAL PHONETIC CHART


THE INTERNATIONAL PHONETIC CHART


SOURCE: http://www.langsci.ucl.ac.uk/ipa/index.html

A must for learning phonetics of all languages!!!

Thursday 22 August 2013

இலக்கணம்

1. சொற்பொருள் விளக்கம்

இலக்கணம் - இலக்கு + அணம்

2. தோற்றம் - இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோன்றுகிறது. இலக்கியத்தில் உள்ள தகவல்களைச் சேர்த்து வகைப்படுத்துதல்.

3. வரையறை - definition

- அமைப்பு
- ஆற்றல்
- பயன்பாடு


அமைப்பு 

எதைக் கொண்டுள்ளது? 

எப்படி மண் இல்லாமல் குடம் இல்லையோ, நூல் இல்லாமல் துணி இல்லையோ, அதே போல ஒலி இல்லாமல் மொழி இல்லை. 

வாய் ஒலி - oral sound - நுனி, இடை, கடை நா மற்றும் அண்ணம் கொண்டு எழும்பப்படும் ஒலி

இங்கே ஒலி - கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். பொருள் உணரும் போது எழுத்து பிறக்க வேண்டும். இதுவே சொல்லாகவும், சொல் தொடராகவும் மாற்றாம் காண்கின்றது. 

இரு சொற்கள் சேரும் போது - புணர்ச்சி விதிகள்/ சந்திகள் ஏற்படுகின்றன.

இதே ஒலியைக் கொண்டே வல்லினம், மெல்லினம், இடையினம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பாட்டை அலசி ஆராயும் போது - அது தொகுத்தல், பகுத்தல், விதிப் படுத்தல் என்ற படிநிலைகளைக் கடந்துசெல்லும். இதன் பின்பே இலக்கண விதிகள் கண்டறியப்பட்டன. 

ஆற்றல் 

இலக்கணத்தின் ஆற்றல், சொற்களைக் கொண்டு வாக்கியங்களை அமைக்க முடியும். 
எ.கா எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்று இம்மூன்றையும் கொண்டே ஒரு எளிய வாக்கியம் அமைக்கப்படுகிறது. 

ஒரு சில விதி முறைகளைக் கொண்டே நம்மால் எண்ணிலடங்கா வாக்கியங்களை உருவாக்க முடியும்.

பயன்பாடு

- உருவாக்கிய வாக்கியங்களைச் சரி பார்த்தல்
வாக்கியங்களில் வேறுபாடுகளை உணர்த்துதல்

1. எ.கா திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

          திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது

2. எ.கா அவன் தம்பி, வீட்டுக்குப் போனான்.

               அவன், தம்பி வீட்டுக்குப் போனான்.

இது போன்ற தடுமாற்றங்களைத் தவிர்ப்பதற்கு இலக்கணம் உதவுகின்றது.

3. எ.கா புதிய மாணவர் விருது

இது புதிய மாணவருக்கு உண்டான விருதா? மாணவருக்கு உண்டான புதிய விருதா?

இது போன்ற குழப்பங்களையும் இலக்கணம் தீர்க்கின்றது. 



இவை அனைத்தும் இலக்கணத்தின் வரையறை


4. பயன் 

நம் மொழியின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.

ஒரு மொழியை பிழையறப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் இலக்கணம் உதவி செய்கிறது.

சரியான வார்த்தைகளைச் சேர்த்துப்படிக்கவும் உதவுகிறது.

எ.கா - சிங்கப்பூர் ஆறு, நகரின் நடுவே இருக்கின்றது. 


கடலை சாப்பிட்டான் / கடலைச் சாப்பிட்டான். 

முதல் கடலை - உணவைக் குறிக்கின்றது
இரண்டாம் கடலைச் - கடல் என்ற சொல்லைக் குறிக்கின்றது

அதனால்தான் கடலை சாப்பிட்டான் என்பதில் வல்லினம் மிகாது.

இலக்கணம் ஒரு பாட்டைப் பிரித்துப் படிப்பதற்கு உதவுகின்றது.


மலைத்தேன் இதுவென மலைத்தேன் - இவை சிலேடைகள்

எ.கா - புத்தியில்லாதவன் = புத்தியில் + ஆதவன் = சிறந்தவன் என்பது பொருள்

எழுத்துத் தமிழில் இலக்கணம் உண்டு

பேச்சுத்தமிழில் இலக்கணம் இல்லை

நினைப்பது 1/4 மாத்திரை, இரண்டு விரல்களைச் சேர்ப்பது 1/2 மாத்திரை, முறுக்குவது 3/4 மாத்திரை, விடுவது 1 மாத்திரை.

அடைமொழிகளைக் கொண்டு வேறுபடுத்தலாம்.இயல்பைக் காட்டலாம். எ.கா. வெண்ணிலா


மொழியின் வரலாறு 


தொல்காப்பிய காலத்தில் நிகழ் காலம் கிடையாது.
குடி மக்கள் என்றால் குடிக்கின்ற மக்களும் இல்லை.
காரன், காரி என்ற suffixes கிடையாது.

வகை 
மரபு இலக்கணங்கள்
வரலாற்று அடிப்படை
நடைமுறை இலக்கணம்


மரபு இலக்கண வகைகள் - எழுத்து இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் என்று வரிவடிவங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. 

பொருள் இலக்கணம் என்பது - இலக்கியத்தைப் பற்றிய செய்திகள்  - அகம், புறம் என இரு வகைப்படும்.

எப்படி எல்லாம் பேசலாம் - யாப்பு - எந்த வகை செய்யுள் அமைப்பு

அணி - உவமைகள் 

இங்கே இலக்கணம் 5 வகைப்படும். 


பாட்டியல், யாப்பு, அணி சொல், அகம், புறம் 

கடவுள் வாழ்த்து

மலர்மிசை எகினாள் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - (3)

கடவுளைப் போற்றுதல் - மனத்தால் நினைக்க வேண்டும், பின்பு புகழைப் பாடுகிறோம் அதன்பின் பணி செய்கிறோம். 

பூவின் மீது சென்றவன் இறைவன், அந்த இறைவனின் சிறப்பான அடி, அதாவது அவருடைய திருவடியை நினைப்பவர்கள் நில உலகத்தில் நீண்டநாள் வாழ்வார்கள். 

இங்கே பூ என்பது உள்ளத்தைக் குறிக்கின்றது. இதனால்தான் நாம் பூவை பூஜைக்குப் பயன்படுத்துவோம். பூவினால் செய்யப்படுவது பூஜை.

இங்கே தண்ணீர் என்பது கண்ணீர். கண்ணீர் என்பது அன்பு.

அன்பை வெளிப்படுத்துவதிலும் உள்ள சிறப்பான வகையைத் திருவள்ளுவர் அன்புடைமையில் கூறியுள்ளார். 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் - 71


Tuesday 20 August 2013

தமிழ் மொழியின் சிறப்பு

செம்மொழி

அதாவது செம்மையான மொழி. இந்த மொழியில் மட்டும்தான் வினைச்சொல்லில் திணை, பால், எண், இடம், காலம் என அனைத்தையும் அறியலாம். 

எ.கா - HE CAME, SHE CAME
             வந்தாள் - உயர்திணை, பெண்பால், ஒருமை, முன்னிலை, இறந்த                                     காலம் 

இங்கே ஒரே சொல்லிலே அனைத்தும் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

உலகப் பேரிலக்கியங்களோடு ஒப்பிடத்த தக்க உயர்வு மொழி.

********வணிகமொழி ஆங்கிலம், தாது மொழி பிரஞ்சு, காதல்மொழி இத்தாலி, தத்துவமொழி ஜெர்மன், பக்தி மொழி தமிழ்*****


நம் மொழியில் முக்கியமானது அகம் புறம் இவ்விரண்டுமேதான்.

அகம் - இயலாதது - களவு, கற்பு

உள்ளமொத்த தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்றுகூடித் தாம் தூய்த்த இன்பம் இத்தகையது எனப் பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது அகம் ஆகும்.

புறம் - இயலும் - கொடை, போர்

இத்தகையது என்று பிறருக்குப் புலப்படுத்தும் இயல்பு வாய்ந்த பிற உணர்ச்சிகளையும் ஒழுக்கங்களையும் கூறுவது புறம் ஆகும். 



Monday 19 August 2013

தமிழ்

'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது மகாகவியின் கூற்று. 

தமிழ் - வல்லினத்திருந்து 'த' , மெல்லினத்திலிருந்து 'ம', இடையினத்திலிருந்து 'ழ' என்று இம்மூன்றையும் கலந்து இணைத்த சொல்லே தமிழ் என்ற அமிழ்து. 

தமிழ் என்ற சொல்லை பல முறை உச்சரித்துப் பாருங்கள் - அமிழ்து அமிழ்து என்று தானே ஒலிக்கின்றது. 

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்!